மாவட்ட செய்திகள்

திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர் + "||" + The young man who killed his friend by putting a flower on his head in anger for advising him to change his life

திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்

திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்
திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் என்ற கார்க் (வயது 25). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி வீட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தனது உறவினரான ரவுடி மணிகண்டன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.

இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 18-ந் தேதி எட்வின் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

திருந்தி வாழும்படி அறிவுரை

நேற்று முன்தினம் இரவு எட்வின், தனது நண்பர்களான ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த அஜித்குமார் என்ற ரசம் (21), ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி, தினேஷ் ஆகியோருடன் தனது வீட்டில் கஞ்சா மற்றும் மது அருந்தினார்.

அப்போது அஜித்குமார், “குற்றங்களை செய்து சிறைக்கு போவது நல்லா இல்லை. இதனால் திருந்தி வாழ வேண்டும்” என்று எட்வினுக்கு அறிவுரை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த எட்வின், அஜித்குமாரிடம் தகராறு செய்தார். இருவரையும் ரவி, தினேஷ் ஆகியோர் சமரசம் செய்தனர்.

பின்னர் ரவி, தினேஷ் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அஜித்குமாரை தன்னுடன் படுக்குமாறு எட்வின் கூறியதால் அவர் மட்டும் அங்கேயே தங்கினார்.

பூந்தொட்டியை போட்டு கொலை

இந்தநிலையில் நேற்று காலை ரவி வீட்டுக்கு சென்ற எட்வின், அஜித்குமாரை கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு தப்பிச்சென்று விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது திருந்தி வாழும்படி அறிவுரை கூறிய நண்பன் அஜித்குமாரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்து விட்டு எட்வின் தப்பியது தெரியவந்தது. கொலையான அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய எட்வினை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலியுடனான உல்லாச வீடியோவை வைத்து ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நண்பன்
டெல்லியில் காதலியுடன் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. தொடர் கொலைகள் காரணமாக போலீசார் அதிரடி வேட்டை - 450 ரவுடிகள் கைது
தொடர் கொலைகள் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
3. வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தி ரூ.10 கோடி மோசடி முயற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் அதிரடி கைது
சென்னையில் வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தி ரூ.10 கோடி மோசடி முயற்சியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
4. மும்பை: ரூ.18 கோடி ஹெராயின் கடத்தல்; பெண் விமான பயணி கைது
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண் பயணியிடம் இருந்து ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் கைது
தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.