மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே மின்கசிவால் 2 குடிசைகள் எரிந்து சாம்பல் + "||" + 2 huts burnt to ashes by electrocution near Thirukkalukkunram

திருக்கழுக்குன்றம் அருகே மின்கசிவால் 2 குடிசைகள் எரிந்து சாம்பல்

திருக்கழுக்குன்றம் அருகே மின்கசிவால் 2 குடிசைகள் எரிந்து சாம்பல்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
நாடக கலைஞரான இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது குடிசையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் அவரது குடிசை தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த துணிமணிகள் உட்பட பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. தீ வேகமாக பரவி அருகில் உள்ள கஜேந்திரன் என்பவரது குடிசையிலும் பரவியது. தகவலறிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ் தீவிபத்தில் சேதமடைந்த 2 குடிசைகளையும் நேரில் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள், வேட்டி, சேலை உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் விவசாயி சாவு
திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் அருகில் நின்ற பலராமனுக்கு அதிர்ச்சியில் மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டு கீழே விழுந்தார்.