மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு + "||" + Lockdown extended in Puducherry

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை,

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு  வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.புதுவையில்  தற்போதைய கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திரைப்படம் மற்றும் சின்னத்திரைக்கான படப்பிடிப்பை 100 பேரைக் கொண்டு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.  மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும்.  பூங்காக்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம். 

அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.  பொதுப் போக்குவரத்துக்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை


தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் மேலும் 447- பேருக்கு கொரோனா- 4 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 500-க்கும் கீழ் தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது அம்மாநில மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்
ரஷியாவை மீண்டும் கொரோனா உலுக்கத்தொடங்கியிருப்பதால், அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
4. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.