மாவட்ட செய்திகள்

கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர்: பணமோசடி வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார் + "||" + Wanted in money laundering case Trapped at the Chennai airport

கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர்: பணமோசடி வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர்: பணமோசடி வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
பணமோசடி வழக்கில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை வழக்கம் போல் குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கன்னியாகுமரியை சோ்ந்தவா் சுபாஷ் லாசா் (வயது 38) என்பவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பண மோசடி உள்பட சில வழக்குகளில் கடந்த ஒராண்டாக போலீசாா் அவரை தேடி வருவதை கண்டுபிடித்தனர்.

முன்னதாக போலீசார் சார்பில் அவர் பற்றி தகவல் தெரிவிக்க விமானநிலையங்களில் லுக்-அவுட் நோட்டீசு அளிக்கப்பட்டது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் சுபாஷ் லாசரை பிடித்து தங்க வைத்தனர்.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தந்தனர். இந்த நிலையில் இடைப்பட்ட நேரத்தில் விமான நிலையத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா மருத்துவ பரிசோதனையில் சுபாஷ் லாசருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்து போலீசாரிடம் சுபாஷ் லாசரை கொரோனா இருப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். லேசான அறிகுறி இருப்பதால் உரிய சிகிச்சையுடன் கன்னியாகுமரி சென்றதும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.