மாவட்ட செய்திகள்

கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் கொள்ளை + "||" + The owner of the quarry robbed the house of money

கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் கொள்ளை

கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் கொள்ளை
திருவேங்கடத்தில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடத்தில் கல்குவாரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கல்குவாரி உரிமையாளர்

திருவேங்கடம் மெயின் பஜாரில் கடமலை ரோட்டில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). இவர் திருவேங்கடம் அருகே கல்குவாரி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊரான திருமங்கலத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டார்.

பணம் கொள்ளை

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. நகைகள் வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் நகைகள் தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் சோதனை நடத்தப்பட்டது. அந்த மோப்ப நாய், வீட்டின் மேல் மாடி மற்றும் திருவேங்கடம் பஜார் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு பொதுமக்களிடம் பிடிபட்ட மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2. கத்திமுனையில் தந்தை மகனை மிரட்டி ரூ 13 லட்சம் நகை பணம் கொள்ளை
தொண்டாமுத்தூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தந்தை- மகனை மிரட்டி ரூ.13 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. வீட்டு கதவை உடைத்து பணம் கொள்ளை
கங்கைகொண்டான் அருகே வீட்டு கதவை உடைத்து பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.
4. கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை- பணம் கொள்ளை
விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.