மாவட்ட செய்திகள்

நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனு + "||" + Gas cylinder workers strike in Nellai; Petition to MLA stressing the demand

நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனு

நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனு
நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.
நெல்லை:
கொரோனா தொற்றுநோய் காலத்தில் வீடு வீடாகச் சென்று கியாஸ் சிலிண்டர்களை கொடுத்து வந்த ஊழியர்கள் அனைவரையும் தமிழக அரசு முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசு முன் களப் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி நெல்லை மாவட்ட அனைத்து எல்.பி.ஜி.சங்க நிர்வாகிகள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்த சிலிண்டர் டெலிவரி ஊழியர்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். கியாஸ் நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் அதனை மனுவாக எழுதி  அப்துல்வகாப் எம்.எல்.ஏ.விடம் வழங்கினர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நம்பியூர் பகுதியில் 200 பனியன் நிறுவனங்கள் மூடல்: தையல் உரிமையாளர்கள் கூலிஉயர்வு கேட்டு வேலை நிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
நம்பியூர் பகுதியில் தையல் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200 பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
3. கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்