மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு + "||" + Forced marriage to a 16-year-old girl; Case against 5 people including husband

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.
ஆவடி,

ஆவடியை சேர்ந்த 16 வயது சிறுமி, பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், உறவினரான ஆவடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 27) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் சென்னை சென்டிரலில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கடந்த 28-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி, திருமணத்துக்கு பிறகு அவரது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோது ‘சைல்டு லைன் 1098’-க்கு போன் செய்து தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டதாக கூறினார்.

இதுபற்றி பூந்தமல்லி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் விஜயா கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக அலுவலர்கள் அந்த சிறுமியை மீட்டு திருநின்றவூர் அருகே உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா சிறுமிக்கு கட்டாய திருமணத்தை செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் மற்றும் அவருடைய பெற்றோர் என 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கட்டாய வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானில் மைனாரிட்டியாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி தலீபான்கள் வெளியேற்றி உள்ளனர்.
2. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்
துமகூருவில் 45 வயதானவரை 25 வயது இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
3. கட்டாய மதமாற்றத்தை தடுக்க சிறப்பு சட்டம் விஸ்வ இந்து பரிஷத் செயல்தலைவர் வலியுறுத்தல்
கட்டாய மதமாற்றத்தை தடுக்க இந்தியா முழுவதும் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக்குமார் கூறினார்.
4. கர்ப்பமாக்கிய காதலியை கோர்ட்டு வளாக கோவிலில் திருமணம் செய்த காதலன்
புதுக்கோட்டையில், கர்ப்பமாக்கிய காதலியை கோர்ட்டு வளாக கோவிலில் காதலன் திருமணம் செய்து கொண்டார்.
5. நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்
நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்.