மாவட்ட செய்திகள்

சென்னையில், அரசு வேலைக்காக போலி அரசாணை நகலை காட்டி ரூ.4½ கோடி மோசடி - 3 பேர் கைது + "||" + in Chennai, Rs 40 crore scam - 3 arrested for showing fake government copy for government work

சென்னையில், அரசு வேலைக்காக போலி அரசாணை நகலை காட்டி ரூ.4½ கோடி மோசடி - 3 பேர் கைது

சென்னையில், அரசு வேலைக்காக போலி அரசாணை நகலை காட்டி ரூ.4½ கோடி மோசடி - 3 பேர் கைது
சென்னையில் அரசு வேலைக்காக போலி அரசாணை நகலை காட்டி ரூ.4½ கோடி மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

சென்னையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையை போலீசாரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அரசு வேலையில் மோகம் கொண்டு அதற்காக குறுக்கு வழியில் பணம் கொடுப்பவர்களை இந்த கும்பல் தங்கள் வலையில் விழவைத்து விடுகிறது. இது போன்ற ஒரு மோசடி கும்பலின் ஆசை வலையில் சிக்கி 85 பேர் பணத்தை வாரி கொட்டி உள்ளனர்.

அந்த மோசடி கும்பல் வேலை கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை காட்ட, போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து ரூ.4½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

ஏமாந்தவர்கள் பட்டியலில் உள்ள ஆனந்தி என்ற பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து முறையிட்டார். கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலைச்சேர்ந்த கணவன்-மனைவி அருண்சாய்ஜி, நந்தினி மற்றும் ரேஷ்மா தாவூத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.