மாவட்ட செய்திகள்

நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு + "||" + The believers were betrayed by Sasikala's sensational speech

நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு

நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு
நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு.
சென்னை,

சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அந்தவகையில் திருப்பூரை சேர்ந்த ரெய்ஹானா பானு, போடியை சேர்ந்த வினித், நெல்லையை சேர்ந்த மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த ரகுமான், தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ், ராமதாஸ் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வில் கட்சியில தொண்டர்கள் தேர்வு செய்பவரே தலைமைக்கு வரமுடியும். அம்மா (ஜெயலலிதா) ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்.

நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை. நம்ம கட்சி இப்படி சீரழியுறதை பாக்க முடியல. கண்டிப்பா வந்து கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன்.

கட்சியை அம்மா போல நானும் வழிநடத்துவேன். இது ஒரு சத்திய சோதனை. தொண்டர்கள் துணையோட அதை வென்று காட்டுவேன்.

இந்த கட்சிக்கு இப்போ ஒற்றுமைதான் வேணும். தலைவர்(எம்.ஜி.ஆர்.) மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரு கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன். அப்படி ஒரு நிலைமைதான் இப்போவும் ஏற்பட்டிருக்கு. இதுலயும் நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா மத்திய மந்திரி பேச்சு
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
3. திறமையான ஐ.டி. துறையினர் அதிகம் உள்ளனர்: தொழில் வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
தமிழகத்தில் திறமையான ஐ.டி. துறையினர் அதிகம் உள்ளனர் என்றும் தொழில் வளர்ச்சியைத் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் சசிகலா முன்னிலையில் நடந்தது
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
5. ‘தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க. ஆட்சிதான்’ முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களிடம் நல்லவர்கள், வல்லவர்கள் என்று பெயர் எடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் இனி தி.மு.க. ஆட்சிதான் என்ற அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் தொண்டர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.