மாவட்ட செய்திகள்

ஊட்டிக்கு திரும்பிய கலெக்டருக்கு கோத்தர் இன மக்கள் வரவேற்பு + "||" + Welcome to the Collector who returned to Ooty

ஊட்டிக்கு திரும்பிய கலெக்டருக்கு கோத்தர் இன மக்கள் வரவேற்பு

ஊட்டிக்கு திரும்பிய கலெக்டருக்கு கோத்தர் இன மக்கள் வரவேற்பு
ஊட்டிக்கு திரும்பிய கலெக்டருக்கு கோத்தர் இன மக்கள் வரவேற்பு.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியாவில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நீலகிரியை முதன்மை மாவட்டமாக மாற்றியதை தொடர்ந்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

அதை பெற்றுக்கொண்டு நேற்று ஊட்டிக்கு திரும்பிய கலெக்டருக்கு கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தபடி வரவேற்பு அளித்தனர். மேலும் சால்வை அணிவித்தனர். அவர்களிடம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததால்தான் இந்த நிலையை எட்ட முடிந்தது. உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.