மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு + "||" + The boy died after being strangled by a rope

ஆண்டிப்பட்டி அருகே ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு

ஆண்டிப்பட்டி அருகே ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு
ஆண்டிப்பட்டி அருகே ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திரவியராஜா. இவருக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் கவியரசன் (வயது 10). திரவியராஜா தனது குடும்பத்தினருடன் பந்துவார்பட்டி அருகே உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். 
இந்தநிலையில் அந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் கவியரசனும், அவனது 2 வயது தம்பியும் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கயிறு எதிர்பாராதவிதமாக கவியரசனின் கழுத்தை இறுக்கியது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திரவியராஜா, தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கவியரசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து தேனி க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் பலியான சம்பவம் பந்துவார்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.