மாவட்ட செய்திகள்

மத்தூர் அருகே கிணற்றில் பெண் பிணம்-கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை + "||" + women body

மத்தூர் அருகே கிணற்றில் பெண் பிணம்-கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

மத்தூர் அருகே கிணற்றில் பெண் பிணம்-கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை
மத்தூர் அருகே கிணற்றில் பெண் பிணமாக மிதந்தார்.
மத்தூர்,

மத்தூர் அருகே உள்ள சவுலுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 40). பொக்லைன் ஆபரேட்டர். இவருடைய மனைவி சுதா (34). இவர் ஊத்தங்கரை சாலையில் உள்ள பெனுகொண்டபுரம் ஏரி அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பூ வியாபாரத்துக்காக சென்ற சுதா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சுதா பெனுகொண்டபுரம் ஏரி அருகே உள்ள விவசாய கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிணற்றில் அவர் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் பெண் பிணம்
பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் பெண் பிணமாக மீட்கப்பட்டார்.