மாவட்ட செய்திகள்

பாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல் + "||" + Ebony smuggling truck confiscated

பாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்

பாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்
பாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்
காவேரிப்பாக்கம்

பாணாவரம் அருகே கூத்தம்பாக்கம் பகுதி மலை அருகே ஒரு சிலர் அனுமதியின்றி கருங்கல் கடத்துவதாக சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாணாவரம் வருவாய் ஆய்வாளர் சமரபுரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முரளி மனோகர், பன்னீர்செல்வம், சுமன் ஆகியோர் நேற்று முன்தினம் கூத்தம்பாக்கம் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாரியில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி கொண்டிருந்தவர்கள் அதிகாரிகள் வருவதை பார்த்ததும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். 

அதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை