மாவட்ட செய்திகள்

ஆரணியில் ஆலங்கட்டி மழை + "||" + Hail in Arani

ஆரணியில் ஆலங்கட்டி மழை

ஆரணியில் ஆலங்கட்டி மழை
ஆரணியில் ஆலங்கட்டி மழை
ஆரணி

ஆரணியில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்தது. அப்போது வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 4.30 மணியளவில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

 சாலைகளில் மழைநீர் பெருக்ெகடுத்து ஓடியது. சுமார் 45 நிமிடம் பெய்த மழை, சாரல் மழை போல் பெய்து கொண்டே இருந்தது.
இதேபோல் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் நேற்று மாலை இடி, காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால்  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 

சேத்துப்பட்டு பகுதியில் மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை