மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி + "||" + corona

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி வழங்க வலியுறுத்தப்பட்டது.
ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராமேசுவரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தியும், கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், தடுப்பூசியை தட்டுப்பாடில்லாமல் கூடுதலாக வழங்கவும், செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தமிழக அரசுஉடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கவும் வலியுறுத்தி கையில் மற்றும் தலையில் கட்டுப்போட்ட படியும் உடலில் குளூக்கோஸ் ஏற்றுவது போன்றும் நின்று நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகாகுழு நிர்வாகிகள் கருணாமூர்த்தி, அசோக், தர்மர், ராமச்சந்திர பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை