மாவட்ட செய்திகள்

1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி

1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் 1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளில் வெள்ளைக்கோட்டை சாலியர் பள்ளியிலும், திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் நகராட்சி சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மொத்தம் 1,116 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
2. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.
4. மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
5. 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.