மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு + "||" + Breaking the lock of the house and stealing 14 pounds of jewelery

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோமரசம்பேட்டை
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள தீரன்நகர் 10-வது கிராசை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 72). இவர் தனது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வருகிறார். சரவணன் கீழ் வீட்டிலும், மீனாட்சி சுந்தரம் மேல் வீட்டிலும் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது இளைய மகனை பார்க்க மீனாட்சி சுந்தரம் செந்தண்ணீர் புரத்திற்கு சென்றிருந்தார். சரவணன், நேற்று முன்தினம் இரவு மேல் வீட்டிற்கு தூங்கச் சென்றார். அப்போது கீழ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.