மாவட்ட செய்திகள்

மது விற்ற 2 பேர் மீது வழக்கு; 123 மதுபாட்டில்கள் பறிமுதல் + "||" + Case against 2 persons for selling liquor; 123 confiscation of liquor bottles

மது விற்ற 2 பேர் மீது வழக்கு; 123 மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 2 பேர் மீது வழக்கு; 123 மதுபாட்டில்கள் பறிமுதல்
மது விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 123 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த் மற்றும் முருகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கல்லாத்தூர் அருகே உள்ள தண்டலை- மங்களம் கிராமம் மற்றும் வெட்டியார்வெட்டு ஆகிய பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தண்டலை -மங்களம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம், வெட்டியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தனகோபால் ஆகியோர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொட்டகைகள் இடிப்பு; 5 பேர் மீது வழக்கு
கொட்டகைகள் இடிக்கப்பட்டது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. 3 மாத பெண் குழந்தையை விற்றதாக தம்பதி மீது வழக்கு
ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்கக்கோரி வழக்கு
மதுரை நகரில் மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்கக்கோரி வழக்கு
4. கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு
ராமநாதபுரத்தில் தடையை மீறி கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. ஆடு திருடு போனதை விசாரிக்க சென்றபோது வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு
வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.