மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து ஆட்டோ நசுங்கியது + "||" + The perimeter wall of the Government Medical College collapsed

அரசு மருத்துவ கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து ஆட்டோ நசுங்கியது

அரசு மருத்துவ கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து ஆட்டோ நசுங்கியது
திருச்சியில் பெய்த கனமழைக்கு அரசு மருத்துவ கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து ஆட்டோ நசுங்கியது.
திருச்சி
கொட்டி தீர்த்த கனமழை
திருச்சியில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வகையில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 10 மணிவரை கனமழை பல்வேறு இடங்களில் பெய்தது. குறிப்பாக திருச்சி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்தது.இந்த கனமழை காரணமாக, திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியிலுள்ள கி.ஆ.பெ. அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் விடுதி சுற்றுச்சுவர் 50 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சஞ்சீவிராஜ் என்பவரின் ஆட்டோ மீது கட்டிட இடிபாடுகள் விழுந்து நசுக்கியது.
ஒரேநாளில் 622.10 மி.மீட்டர் மழை பதிவு
திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கல்லக்குடி 23.40, லால்குடி 13.20, நந்தியார் அணை 4.40, புள்ளம்பாடி 25.40, தேவிமங்கலம் 23, சமயபுரம் 27.40, சிறுகுடி 3, வாத்தலை அணைகட்டு 5.20. மணப்பாறை 23, பொன்னையார் அணை 8.60, கோவில்பட்டி 12.20, மருங்காபுரி 8.20, முசிறி 40, புலிவலம் 20, தா.பேட்டை 75, நவலூர் குட்டப்பட்டு 17, துவாக்குடி 21.30, கொப்பம்பட்டி 28, தென்பரநாடு 41, துறையூர் 7, பொன்மலை 34.40, ஏர்போர்ட் 70.40, திருச்சி ஜங்சன் 49, திருச்சி டவுன் 42.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 622.10 மில்லி மீட்டர் மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. சராசரி மழையின் அளவு 24.88 மில்லி மீட்டர் ஆகும்.