மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு:விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள் + "||" + Government school students who raised awareness

கொரோனாவுக்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு:விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

கொரோனாவுக்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு:விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்
கொரோனாவுக்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு என அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வையம்பட்டி
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். பெரிய அட்டையில் ஊசி போன்ற வடிவத்தை உருவாக்கி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது மாணவி ஒருவர் மருத்துவர் போல வேடமணிந்து கலந்து கொண்டார். பின்னர், கடைவீதி மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பிரதமர், முதல்-அமைச்சர் என அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ெகாரோனாவுக்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை