மாவட்ட செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு + "||" + Death of a woman injured in an accident

விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு

விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு
நெல்லையில் விபத்தில் காயம் அடைந்த பெண் இறந்தார்.
நெல்லை:
நெல்லை கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் மரியசெல்வம். இவருடைய மனைவி மரிய லூர்து (வயது 58). இவர் சம்பவத்தன்று தனது மகன் ஆரோக்கிய ஏசுவடியானுடன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது திடீரென 2 பேரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மரிய லூர்து பலத்த காயமடைந்தார். ஆரோக்கிய ஏசுவடியானுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மரிய லூர்து நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.
3. விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.
4. லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி
ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார்சை்ககிள் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
5. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.