மாவட்ட செய்திகள்

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி + "||" + The boy drowned in the pool

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான்.
மணப்பாறை
குளத்தில் மூழ்கினான் 
மணப்பாறையை அடுத்த வடக்கு பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சந்தோஷ் (வயது 12). சிறுவன், நேற்று காலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.  இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சந்தோசை தேடிச் சென்றனர். அப்போது கீழபூசாரிபட்டியில் உள்ள குளத்தின் அருகே சிறுவனின் சைக்கிள் நின்றது. மேலும் குளத்தில் உள்ள தண்ணீரின் அருகே சிறுவனின் காலணி மற்றும் உடைகள் இருந்தன. இதைப்பார்த்ததும் அருகில் உள்ளவர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கிப் பார்த்த போது சிறுவன் நீரில் மூழ்கியது தெரிய வந்தது. பின்னர், சிறுவனை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானார்.
2. குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
நண்டு பிடிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.