மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில்தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள் + "||" + people crowd for vaccination

ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில்தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில்தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
தடுப்பூசி மையங்கள்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 100 மையங்களில் தலா 100 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஒன்றிய பகுதிகளில் 80 மையங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 20 மையங்களிலும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 
ஈரோட்டில் நேற்று அதிகாலை வரை மழைத்தூறல் இருந்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைகளுடன் வந்து தடுப்பூசி மையங்களில் அதிகாலையிலேயே காத்து இருந்தனர்.
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாரப்ப வீதி, சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடம், வைராபாளையம் அருள்நெறி திருப்பணி மன்றம் பள்ளிக்கூடம் உள்பட அனைத்து மையங்களிலும் 100 பேருக்கும் மேல் கூடி இருந்தனர். ஆனால் 100 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புகார்
இதற்கிடையே ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்த முகாமில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும், வரிசையில் பலரும் காத்திருக்க அவர்களுக்கு தெரிந்தவர்களை அழைத்துச்சென்று தடுப்பூசி போட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
தொடர்ந்து வரும் நாட்களில் பொதுமக்கள் புகார்கள் இன்றியும், நெரிசல் இன்றியும் தடுப்பூசிகள் போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம்
ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.