மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 104 பேர் பாதிப்பு + "||" + 104 people were infected with corona in a single day

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 104 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 104 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 104 பேர் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 104 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 634 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

892 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,710 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.