மாவட்ட செய்திகள்

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி + "||" + The boy drowned in the pool

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
நண்டு பிடிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் செந்தில்முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தீபக் (வயது9). இவன், கரிசல்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் இவன், அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். 

அப்போது அங்குள்ள குளத்தில் சிறுவர்கள் சிலர் நண்டுகளை பிடித்து கொண்டிருந்தனர். இதனைக்கண்ட தீபக், அங்கு சென்று அவர்களுடன் சேர்ந்து நண்டு பிடிக்க முயன்றான். 

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தீபக் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதனைக்கண்ட சிறுவர்கள் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

குளத்தில் சமூக விரோதிகள் சிலர் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் இறங்கியதால் சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே குளத்தில் மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானார்.
2. மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான்.