மாவட்ட செய்திகள்

உடுமலையில் நாளை முதல் பஸ்களை இயக்குவதற்கு 60 அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன + "||" + udumalai bus

உடுமலையில் நாளை முதல் பஸ்களை இயக்குவதற்கு 60 அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

உடுமலையில் நாளை முதல் பஸ்களை இயக்குவதற்கு 60 அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
உடுமலையில் நாளை முதல் பஸ்களை இயக்குவதற்கு 60 அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
உடுமலை, 
கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளின்படி உடுமலையில் நாளை முதல் பஸ்களை இயக்குவதற்கு 60 அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பணிக்கு வரும்படி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளையில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன்பஸ்கள் 58-ம், ஸ்பேர் பஸ்கள் 7-ம் என மொத்தம் 101 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்து, அரசு உத்தரவு எப்போது வந்தாலும் பஸ்களை இயக்குவதற்கு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா நேற்று  உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழகத்தில், பராமரிப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள அனைத்து பஸ்களிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் மணிகண்டன் உடனிருந்தார்.
நாளை முதல் இயக்கம்
இந்த நிலையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி உடுமலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக வெளியூர் செல்லும் பஸ்கள் 25, டவுன் பஸ்கள் 35 என மொத்தம் 60 அரசு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்களை இயக்குவதற்கு தேவைப்படும் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோரை பணிக்கு வரும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை