மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி சாவு + "||" + The grandmother died tragically in a motorcycle accident near Vilathikulam.

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி சாவு
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 60). இவர் தனது பேரன் ஒருவருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, குளத்தூரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூசனூர் அய்யனார் கோவில் அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் பழுதாகி சாலையில் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த முனியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.