மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் பரபரப்பு: கோவில், சூப்பர் மார்க்கெட்டில் 2 கிலோ வெள்ளி நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை + "||" + 2 kg silver jewelery, Rs 3 lakh robbery at temple, supermarket

தர்மபுரியில் பரபரப்பு: கோவில், சூப்பர் மார்க்கெட்டில் 2 கிலோ வெள்ளி நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை

தர்மபுரியில் பரபரப்பு: கோவில், சூப்பர் மார்க்கெட்டில் 2 கிலோ வெள்ளி நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை
தர்மபுரியில் கோவில் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் 2 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரியில் கோவில் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் 2 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளி நகைகள்
தர்மபுரி நெசவாளர் காலனியில் மகாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் அர்ச்சகர் சாந்தமூர்த்தி (வயது 64) நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்று முன்பக்க கதவை திறந்தார்.
கோவிலின் உள்ளே மூலஸ்தானத்தை சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. சாமியின் தலையில் வைக்கும் 1½ கிலோ எடையுள்ள வெள்ளி கிரீடம் உள்பட 2 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகள், 2 கிராம் தங்கம் ஆகியவை மாயமாகி இருந்தன.
தடயங்கள் சேகரிப்பு
கோவிலின் பின்பக்க சுவரில் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகள் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவில் வளாக பகுதியில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சில தடயங்களையும் சேகரித்தனர். அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூப்பர் மார்க்கெட்
இதேபோல் தர்மபுரி எஸ்.வி. ரோடு பகுதியில் பல்வேறு வகையான பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஜன்னலை உடைத்து நேற்று அதிகாலை உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். 
நேற்று காலை சூப்பர் மார்க்கெட்டை ஊழியர்கள் திறந்தபோது இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவர்களுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகி நரசிம்மன் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
பரபரப்பு
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கொள்ளை நடைபெற்ற பகுதியில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளையும் பார்வையிட்டனர்.
தர்மபுரி நகரில் ஒரே நாளில் கோவில் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் 2 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.