மாவட்ட செய்திகள்

நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? + "||" + Will the modern rice mill be brought into use?

நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
திருவாரூரில் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர்:
திருவாரூரில் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 
உணவு உற்பத்தி 
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இருந்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக நெல் உற்பத்தி நடைபெறுவதால் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்து வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நெல் மூட்டைகள் அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாராகிறது. இந்த அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அரவை பணிகள் நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமாக திருவாரூர் மற்றும் சுந்தரகோட்டை ஆகிய 2 இடங்களில் நவீன அரிசி ஆலை இயங்கி வந்தது. இதில் திருவாரூர் நவீன அரிசி ஆலை நாள் ஒன்றுக்கு 100 டன் அரிசி உற்பத்தி திறன் கொண்டது. இந்த அரிசி ஆலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நவீனமாக்கப்பட்ட அரிசி ஆலையாக மாற்றப்பட்டு, இயற்கை எரிவாயு மூலம் செயல்படுத்தும் வகையில் புதிதாக கட்டுமான வசதிகளும் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலே மீண்டும் அரவை பணிகள் நிறுத்தப்பட்டது. 
இதனால் திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மில்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி அரிசி மூட்டைகள் தயாராகிறது.
பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?
இந்த சூழ்நிலையில் விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரில் உள்ள நவீன அரிசி ஆலை கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்கு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்றம் செய்ய்பட்டனர். மேலும் நவீனமயமாக்கப்பட்ட அரிசி ஆலையில் எந்திரங்கள்  பயன்பாடின்றி பழுதடைந்து வருகிறது. மேலும் கட்டுமானங்கள் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது.
எனவே நாள்தோறும் 100 டன் அளவில் அரவை திறன் கொண்ட அரசு நவீன அரிசி ஆலை எந்திரஙகளின் பழுதுகளை சீரமைக்க வேண்டும். மேலும் பூட்டியே கிடக்கும் ஆலையை திறந்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.