மாவட்ட செய்திகள்

விருதுநகரில் தொடரும் மின்தடை + "||" + power cut

விருதுநகரில் தொடரும் மின்தடை

விருதுநகரில் தொடரும் மின்தடை
மின் பாதை பராமரிப்பு பணிக்கு பின்பும் விருதுநகரில் தொடரும் மின்தடையால் ெபாதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர், 
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று மின்வாரியம் உறுதியளித்தது. விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களாக போர்க்கால அடிப்படையில் 600 ஊழியர்கள் பாதை பராமரிப்பு பணியை மேற்கொண்டனர்.  தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்குமாறாக விருதுநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நேற்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நான்கு முறை நகரின் மையப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி மின் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறும் நிலையே இருந்தது. தடையில்லா மின்சாரம் வழங்க உறுதி அளிக்க தயாராக இல்லை. எனவே மின் பகிர்மான வட்ட உயர் அதிகாரிகள் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
விருதுநகர் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
2. மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை
மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
3. வெம்பக்கோட்டையில் இன்று மின்தடை
வெம்பக்கோட்டையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
4. பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை
விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
5. ராமநாதபுரத்தில் இன்று மின்தடை
ராமநாதபுரத்தில் இன்று மின்தடை