மாவட்ட செய்திகள்

கொடைரோடு அருகே மாவூர் அணையில் தண்ணீர் திறப்பு + "||" + Water opening in the dam

கொடைரோடு அருகே மாவூர் அணையில் தண்ணீர் திறப்பு

கொடைரோடு அருகே மாவூர் அணையில் தண்ணீர் திறப்பு
கொடைரோடு அருகே மாவூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கொடைரோடு:
கொடைரோடு அருகே பள்ளப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் மாவூர் அணை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணை நிரம்பியது. 
இதனையடுத்து அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறுகிற தண்ணீர் புலம்மாசி குளம், அகரம் குளம், ரெட்டிக்குளம் ஆகிய குளங்களுக்கு செல்கிறது. இதனால் அப்பகுதி  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.