மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய 2 பேர் கைது + "||" + 2 arrested for smuggling cannabis

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது
திசையன்விளையில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் மன்னார்புரம்-இட்டமொழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சங்கணாங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 33), சோலையப்பன் மகன் இசக்கி பாண்டி (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் கஞ்சா மொத்த வியாபாரிகள் என தெரிய வந்தது. அவர்களின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் கைது
ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் கத்திமுனையில் ரூ.30 லட்சத்தை பறித்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
2. பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது
பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
3. கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மண் திருடிய 2 பேர் கைது
மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. ஆடு திருடிய 2 பேர் கைது
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.