மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு + "||" + The case against the man who attacked the woman

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மு.முத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது 48). இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ராதாகிருஷ்ணன்(50) குடும்பத்திற்கும் இடையே விவசாய நிலத்தில் எல்லை சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கஸ்தூரியின் வீட்டிற்கு வந்த ராதாகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் அவரது கணவர் அரியமுத்து ஆகியோரது பெயரைச்சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. ஏன் திட்டுகிறாய் என்று ராதாகிருஷ்ணனிடம், கஸ்தூரி கேட்டதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கஸ்தூரியை, ராதாகிருஷ்ணன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கஸ்தூரி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரி வழக்கு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய&மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. கொட்டகைகள் இடிப்பு; 5 பேர் மீது வழக்கு
கொட்டகைகள் இடிக்கப்பட்டது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. 3 மாத பெண் குழந்தையை விற்றதாக தம்பதி மீது வழக்கு
ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்கக்கோரி வழக்கு
மதுரை நகரில் மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்கக்கோரி வழக்கு
5. கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு
ராமநாதபுரத்தில் தடையை மீறி கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.