மாவட்ட செய்திகள்

சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த சில மணி ேநரத்தில் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கொடூரம் + "||" + The atrocity of hanging a baby girl to death within hours of birth

சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த சில மணி ேநரத்தில் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கொடூரம்

சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த சில மணி ேநரத்தில் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கொடூரம்
சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த சில மணி ேநரத்தில் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிக்பள்ளாப்பூர்:

உயிருக்கு போராடிய குழந்தை

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்க தனி வார்டும் அமைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பிரசவ வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய ஊழியரான வெங்கடேசப்பா என்பவர் பினாயில் ஊற்றினார்.

  பின்னர் வெங்கடேசப்பா அங்கிருந்து சென்றார். இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அதாவது 9 மணிக்கு கழிவறையை சுத்தம் செய்ய வெங்கடேசப்பா சென்றார். அப்போது கழிவறையில் வெங்கடேசப்பா கண்ட காட்சி அவரை நிலைகுலைய செய்தது. அதாவது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தது.

தூக்கில் தொங்கவிட்டு....

  இதனை பார்த்து அதிர்ந்த வெங்கடேசப்பா அலறியடித்தப்படி அங்கிருந்து ெவளிேய ஓடி வந்்தார். பின்னர் சம்பவம் குறித்து டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் வெங்கடேசப்பா தெரிவித்தார். இதையடுத்து கழிவறைக்கு டாக்டர்கள், நர்சுகள் ஓடி வந்து குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டது.

  இதுகுறித்து டாக்டர்கள், சிந்தாமணி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார் இறந்து போன பெண் குழந்தையின் உடலை பார்வையிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை யாரோ கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துணியால் தூக்குமாட்டி தொங்கவிட்டதும், கழுத்து இறுக்கி குழந்தை இறந்து போனதும் தெரியவந்தது.

ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பு

  இதையடுத்து அந்த கழிவறைக்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது காைல 8 முதல் 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த கழிவறையில் இருந்து 2 பெண்கள், ஒரு ஆண் வந்தது தெரிந்தது. இதனால் அவர்கள் தான் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 2 பெண்கள் உள்பட 3 ேபரையும் பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

  இதற்கிடையே சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்து உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, கடந்த 24 மணி நேரத்தில் சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன. அந்த 6 குழந்தைகளும் தற்போது தாயுடன் உள்ளன. கொலை செய்யப்பட்ட பெண் குழந்தை இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கவில்லை. வேறு எங்கேயோ பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து தூக்கில் தொங்கவிட்டு சென்று உள்ளனர் என்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில்.....

  பெண் குழந்தையாக பிறந்ததால் இந்த குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

  போலீசாரின் சந்தேக பார்வையில் சிக்கி உள்ள 2 பெண்கள், ஒரு ஆணை பிடித்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த ஆஸ்பத்திரியில் சிக்பள்ளாப்பூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

  இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பச்சிளம் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை