மாவட்ட செய்திகள்

கத்தி முனையில் பணம் பறிப்பு; வாலிபர் கைது + "||" + Flip the money at the tip of the knife; Valipar arrested

கத்தி முனையில் பணம் பறிப்பு; வாலிபர் கைது

கத்தி முனையில் பணம் பறிப்பு; வாலிபர் கைது
திருவள்ளூரை அருகே கத்தி முனையில் பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 43). இவர் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பஜாரில் கடந்த 4 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ரவி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்கிற அப்பு (26) தனக்கு பிரை ரைஸ் வேண்டும் என்று கேட்டார். தொடர்ந்து பிரை ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் ரூ.250 கேட்டார். அதற்கு ரவி மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமல்ராஜ் கத்தி முனையில் மிரட்டி ரூ.250-ஐ பறித்து கொண்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து ரவி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக அமல்ராஜை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை