மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தில் கடையை சூறையாடிய 2 பேர் மீது வழக்கு + "||" + Case against 2 people who looted the shop in the animosity

முன்விரோதத்தில் கடையை சூறையாடிய 2 பேர் மீது வழக்கு

முன்விரோதத்தில் கடையை சூறையாடிய 2 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் முன்விரோதத்தில் கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மோதிலால் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 50). நேற்று முன்தினம் ராஜலட்சுமி தான் நடத்தும் கடையில் இருந்தார். அப்போது அங்கு இருந்த தீபிகா, விக்ரம் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி அவர் நடத்தும் கடையை சூறையாடி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராஜலட்சுமி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக தீபிகா, விக்ரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை