மாவட்ட செய்திகள்

சாணார்பட்டி பகுதியில்குளத்து மீன் வாங்க மக்கள் ஆர்வம் + "||" + In the Sanarpatti area People are interested in buying pond fish

சாணார்பட்டி பகுதியில்குளத்து மீன் வாங்க மக்கள் ஆர்வம்

சாணார்பட்டி பகுதியில்குளத்து மீன் வாங்க மக்கள் ஆர்வம்
சாணார்பட்டி பகுதியில் குளத்து மீனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கோபால்பட்டி:
சாணார்பட்டி பகுதியில் பெரும்பாலான குளங்கள் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி கோபால்பட்டி, கணவாய்பட்டி, வி.குரும்பபட்டி, கன்னியாபுரம், ராமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதியில் உள்ள குளங்களில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
இப்பகுதியில் ஆறுகள், அணைக்கட்டுகள் இல்லாததால் கடல் மீன் மட்டுமே விலைக்கு வாங்கி சாப்பிட்டு வந்த பொதுமக்களுக்கு உயிருடன் கிடைக்கும் குளத்து மீன்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மீன்கள் பிடிக்கப்படும் குளங்களுக்கு அதிகாலையிலேயே மக்கள் படையெடுத்து செல்கின்றனர். அவர்கள் குளங்களில் பிடிக்கப்படும் கட்லா, பாறை, ஜிலேபி, கெண்டை, விறால் உள்ளிட்ட மீன்களை போட்டிப்போட்டு வாங்குகின்றனர். மீன்கள் ரகத்தை பொறுத்து கிலோ ரூ.200 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.