மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + helmet fine

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்
திருப்பூர்:
கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த நிலையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர் மாநகரம் நேற்று வழக்கம் போல் இயங்கியது. இருப்பினும் பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர். இதில் முககவசம் அணியாமலும், ஹெல்மெட் அணியாமலும் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.