மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு + "||" + Subinspector handed over to relatives until he turned on the road

சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
கேட்பாரின்றி சாலையில் திரிந்தவரை உறவினரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
மதுரை,ஜூலை.6-
மதுரை மாவட்ட காவல்துறை தனிப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துகிருஷ்ணன் கடந்த 4-ந்தேதி ஒத்தக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேட்பாரின்றி சாலையில் ஒரு நபர் சுற்றி திரிந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த முத்துகிருஷ்ணன் மேலும் விசாரித்த போது, அந்த நபர் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த சுரேஷ் கண்ணன் (வயது 35) என்பதும், கடன் தொல்லை காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊரை விட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முத்துகிருஷ்ணன், கோவை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, சுரேஷ் கண்ணனை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணனை நேரில் அழைத்து பாராட்டினர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளை பாராட்டினர்.
2. மாணவிக்கு பாராட்டு
கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினர்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் எழுதிய கறம்பக்குடி மாணவிக்கு ஐ.நா.சபை பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய கறம்பக்குடி மாணவிக்கு ஜ.நா.சபை செயலகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதில் ஆக்கப்பூர்வமான கருத்து என புகழாரம் சூட்டி உள்ளது.
4. சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு
சிவகாசியில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.
5. ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனை அனைவரும் பாராட்டினர்.