மாவட்ட செய்திகள்

கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது + "||" + rasan rise

கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது
கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் மானுவக்காடு என்ற இடத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அந்த வீட்டில் 12 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 
4 பேர் கைது
அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் பவானிசாகர் அகதிகள் முகாமை சேர்ந்த மதியழகன் (வயது 40), விஜயன் (35), விஜய் (34), மானுவக்காட்டை சேர்ந்த வேலாயுதன் (32) என்பதும், இவர்கள் 4 பேரும் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசிகளை வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து வெளிமாநிலம், மற்றும் வெளிமாவட்டங்களில் அதிக விலைக்கு விற்று வந்ததும்’ தெரிய வந்தது.
மேலும் பிடிபட்ட 4 பேரையும் ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் கோபி போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள், வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்
சிவகாசி அருகே 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 4 பேர் சிக்கினர்.
2. பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
3. தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசி
தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
4. ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடி
தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
5. காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
வெம்பக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.