மாவட்ட செய்திகள்

பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் + "||" + Metro trains will run from 5.30 am at the request of passengers

பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்

பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்
பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் அதிகாரிகள் தகவல்.
சென்னை,

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் 50 சதவீதம் இருக்கை வசதிகளுடன் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் இன்று (வியாழக்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 6.30 மணிக்கு பதிலாக 1 மணி நேரத்துக்கு முன்பாக காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரெயில் சேவைகள் நெரிசல் மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தலா ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.

முககவசம் அணியாமலும், முறையாக அணியாமலும் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வந்த 34 பேரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பயணிகளை கண்காணிக்க தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி: கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி காரணமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நாளை முதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
2. மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
3. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியில் 38 லட்சம் டன் மணல் அப்புறப்படுத்த திட்டம்
சென்னையில் தொடங்கி உள்ள மெட்ரோ ரெயில் சேவைக்கான 2-ம் கட்ட பணியின்போது சேரும் 38 லட்சம் டன் மணல் மற்றும் குப்பை களை 1 லட்சத்து 51 ஆயிரம் டிப்பர் லாரி நடைகள் மூலம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
4. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடக்கம்: சென்னையில் 6 மேம்பாலங்களுக்கு மேல் உயர்மட்ட பாதை அமைக்க திட்டம்
சென்னையில் தொடங்கி உள்ள மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான 2-ம் கட்ட பணியில் மாநகர பகுதியில் உள்ள 6 மேம்பாலங்களின் மேல் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு ரெயில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு
பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.