மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Fear of police investigation Worker commits suicide by hanging

போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வளவனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வளவனூர்,

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). தொழிலாளி. இவர் வளவனூரை சேர்ந்த உமா என்பவருக்கு வட்டிக்கு பணம் வசூலித்து கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் உமாவிடம் புதுச்சேரி மாநிலம் திருபுவனை கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை.

இந்த கடனை திருப்பி செலுத்துமாறு ரவியும், உமாவும் இளங்கோவை மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த இளங்கோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாவை கைது செய்தனர். இந்த நிலையில் தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்து கைது செய்துவிடுவார்களோ என அச்சம் அடைந்த ரவி கோலினூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
2. ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
3. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் தள்ளிப் போனதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. கோத்தகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோத்தகிரி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.