மாவட்ட செய்திகள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவு + "||" + transfer

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவு

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:

பணி இடமாற்றம்
சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்து சரக ேபாலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த லட்சுமணதாஸ், தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் தங்கவேல், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், தர்மபுரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். 
குற்ற தடுப்பு பிரிவு
சேலம் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் தேவராஜ், சேலம் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீர் மாற்றம்
சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்
அரை நிர்வாண வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
3. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
4. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.