மாவட்ட செய்திகள்

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் + "||" + Cottage fire due to electrical leakage; Items burned and destroyed

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள ஜமீன் கொரட்டூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவருக்கு வசந்தி (வயது 32) என்கிற மனைவியும், தர்ஷினி என்ற ஒரு மகளும், தீபக், தர்ஷன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அவர் வீட்டில் அவரது மகள் மற்றும் மகன்கள் இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்து டி.வி. வெடித்தது. இதனால் பதறிப்போன அவரது குழந்தைகள் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த ரூ.80 ஆயிரம், 20 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்களை முற்றிலுமாக எரிந்து நாசமானது.

பின்னர் திருவூரில் உள்ள தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வசந்தி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.
2. டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
3. இந்தோனேசியா சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 41 பேர் பலி!
இந்தோனேசியாவின் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.
4. ஆந்திரா: பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. லண்டனில் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தீ கட்டுக்குள் வந்ததாக தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.