மாவட்ட செய்திகள்

‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு + "||" + "I will lead the AIADMK according to the number of volunteers," Sasikala said

‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு

‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு
‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு.
சென்னை,

சசிகலா தினந்தோறும் தொலைபேசி வழியாக தொண்டர்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில் செங்கல்பட்டை சேர்ந்த வெங்கடேசன், எடப்பாடியை சேர்ந்த முகமது, கார்த்திக், திருச்சியை சேர்ந்த மூர்த்தி உள்ளிட்டோருடன் சசிகலா நேற்று பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-

தொண்டர்கள் நினைத்தது போலவே கட்சியை நல்லபடியாக கொண்டு வருவேன். எனவே தொண்டர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கட்சியை நல்லபடியாக கொண்டுவந்து, அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை எதிர்காலத்தில் அமைப்போம். கட்சி நன்றாக இருக்கவேண்டும். எல்லாருமே ஒருதாய் வயிற்று பிள்ளைகள் தான். எனவே நமது இலக்கை அடைய ஒற்றுமையாக உழைக்கவேண்டும்.

கட்சியை காப்பாற்ற கட்டாயம் நான் வருவேன். தொண்டர்களின் மனக்குமுறலை சரிசெய்ய நான் கட்டாயம் வந்தாக வேண்டும். எனவே ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் சென்று, அதனைத்தொடர்ந்து தொண்டர்களை சந்திக்க புறப்படுவேன். இப்போது என் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. தொண்டர்கள், தமிழக மக்களின் வேண்டுதலால் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். தொண்டர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதே நிம்மதியாக இருக்கிறது. தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன். எனவே தொண்டர்களுக்காக நிச்சயம் நான் வருவேன். ஊரடங்கு முடிவதற்காக தான் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளைக்கொடி காட்டும் சசிகலா...! இறங்கி வருவார்களா அ.தி.மு.க தலைவர்கள்...!
தற்போதைய அ.தி.மு.க தலைமையுடன் இணக்கமாக செல்லத் தயார் என வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் சசிகலா.
2. ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி சசிகலா மரியாதை
சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு, அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வந்தார்.
3. தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று (சனிக்கிழமை) மரியாதை செலுத்துகிறார்.
5. புதுக்கோட்டையில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்
புதுக்கோட்டையில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.