மாவட்ட செய்திகள்

கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன + "||" + The shops were open until 9 p.m.

கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன

கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன.
அரியலூர்:

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 24-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கிற்கு தடை விதிக்காமல் பல்வேறு தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு வந்தன.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 8-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது வருகிற 19-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இரவு 9 மணி வரை...
அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ந்தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. கடைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டன.
கடைகள் பூங்காக்கள் திறக்கப்பட்டன.
2. கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்: தமிழக அரசு சட்டத்திருத்தம் தாக்கல்
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்று சட்டசபையில் சட்டத் திருத்த முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
3. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் கடைகள் மீண்டும் திறப்பு
தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் மீண்டும் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
4. மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன.
5. கரூரில், ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள்
கரூரில், ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டது.