மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி + "||" + Congress party rallies in Tiruvallur district to condemn hike in petrol, diesel and kerosene prices

திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி

திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இருந்து சைக்கிள் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.
பேரணியை பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவலிங்கம், மீஞ்சூர் பொன்னேரி நகர காங்கிரஸ் தலைவர்கள் 
துரைவேல்பாண்டியன், கார்த்திகேயன், மாவட்ட துணைத்தலைவர் பிரகாசம், வட்டார தலைவர் ஜெலந்தர், செயலாளர் கோவர்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரி கமலா திரையரங்கம் அருகே சைக்கிள் பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் டி.கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், நெசவாளர் அணி தலைவர் சுந்தரராஜன், வட்டார தலைவர் முருகன், நகர தலைவர் பார்த்திபன் உள்பட 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம், மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. போராட்டத்தில் வட்டார தலைவர் மதன்மோகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சம்பத், மாவட்ட செயலாளர் சிவா ரெட்டி நகரத்தலைவர் குணசேகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசல் விலை 30% அதிகரிப்பு
விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
2. பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: காங்கிரஸ்
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த 9 நாட்களுக்கு தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
4. திருவள்ளூர் அருகே நண்பனை ஓட, ஓட விரட்டி கொலை செய்த தொழிலாளி
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் நண்பனை ஓட, ஓட விரட்டி கொலை செய்த தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
5. திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.