மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம் + "||" + 75% of patients with coronary heart disease at Rajiv Gandhi Government Hospital

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்.
சென்னை,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 32 வயது ஆண் கொரோனா நோயாளி ஒருவர் கடந்த மே மாதம் 12-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் போது 75 சதவீத நுரையீரல் பாதிப்புடன், மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்பட்டார்.


தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்த அவருக்கு 9 நாட்களுக்கு நவீன வென்டிலேட்டர் கருவி மூலம் டாக்டர்கள் சுவாசம் அளித்தனர். மேலும், கொரோனா நோய்க்கு உண்டான மருந்துகள் அனைத்தும் ஊசி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. பின்பு படிப்படியாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து தற்போது, கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

இந்தநிலையில், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினரை பாராட்டி, கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு பூங்கொத்து கொடுத்து மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மன்மோகன் சிங் விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
2. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.