மாவட்ட செய்திகள்

புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா + "||" + Corona for 124 people in the last 24 hours in Puducherry

புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா

புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 1,695 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 100 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் புதுச்சேரியில் 106 பேர், காரைக்காலில் 15 பேர், மாஹேவில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,181 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை புதுச்சேரியில் கொரோனாவால் 1,771 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,026 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,384 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் உச்சம்தொடும் கொரோனா பலி: ஒரேநாளில் 1,123 பேராக உயர்வு!
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.8ல் பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
3. புதுச்சேரியில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 453 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. புதுச்சேரியில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5. புதுச்சேரியில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 457 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.