மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + corona vaccine

ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவிஷில்டு தடுப்பூசி
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவது குறைவு என்பதால் பொதுமக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ந் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் கோவிஷில்டு தடுப்பூசி 2-ம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது.
10,700 பேர்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வந்தது. இதைத்தொடர்ந்து தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 111 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடும் பணி நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. வழக்கம்போல் இரவிலேயே பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் 20 இடங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் 100 கோடிகளுக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
2. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 96.43 கோடியாக உயர்வு
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 96.43 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பூசி
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. 8,011 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 8,011 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
5. பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போட ஆற்றை கடந்து சென்ற டாக்டர்கள்
பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக டாக்டர்கள் ஆற்றை கடந்து சென்றனர்.